29.10.2017
18.10.2017
ஒட்டகம்
10.10.2017
பொதுஅறிவு
வெட்டுக்கிளி ஒரு பூச்சியினம். நீண்டு மடங்கிய பின்னங்கால்களை உடைய, பச்சை நிறப் பூச்சி. வெட்டுக்கிளி பல்வேறு நிறங்களில் உள்ளன. புல், இலைகள் போன்றவற்றை உண்டு வாழும். பயிர்ச் செடிகளுக்குக் சேதம் விளைவிப்பதால் இது உழவர்களின் எதிரி என்று அறியப்படுகிறது.
20.05.2017
09.01.2017
04.09.2016
ஒட்டகச் சிவிங்கி
நீண்ட கழுத்தும், நீண்ட கால்களும் கொண்ட ஆப்பிக்காவில் காணும் விலங்கு. உலகின் மிக உயரமான விலங்கினம் இதுவாகும். ஒட்டகச் சிவிங்கிகளின் அடி வயிற்றைத் தவிர்ந்த ஏனைய உடல் முழுதும் புள்ளிகள் காணப்படுகின்றன. புள்ளிகளின் அமைப்பு ஒவ்வொன்றுக்கும் தனித்துவமானவை. இவை நீண்ட நீல நிற நாக்கினைக் கொண்டுள்ளன. இவற்றின் முன்னங்கால்கள் பின்னங்கால்களைவிட நீளமானவை.
12.06.2016
வான்குடை (பரசூட்)
20.10.2017
வான்குடை (பரசூட், parachute) வளிமண்டலத்தில் நகர பயன்படும் ஒரு கருவி. வான்குடைகள் மெலிதான ஆனால் உறுதியான பொருட்களால் செய்யப்படுகின்றன. முன்னர் பட்டினால் செய்யப்பட்டன. இப்போது நைலான் செயற்கை இழையினால் செய்யப்படுகின்றன. மக்கள், சரக்குகள், உணவு, வெடி குண்டுகள் என பலதரப்பட்ட பொருட்களை வான்வெளியி லிருந்து பூமிக்குக் கொண்டு வர பயன்படுத்தப்படுகின்றன
பொதுஅறிவு
- இலங்கையில் உயர்ந்த நீர்வீழ்ச்சி எது? - பம்பரகந்த.
- இலங்கையில் நீளமான ஆறு எது? – மகாவலி கங்கை 335 கி. மீ
- இலங்கையின் உயர்ந்த மலை எது? - பிதுருதலாகல (Pidurutalagala) கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி)
18.10.2017
ஒட்டகம்
ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும். ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன.ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது.
10.10.2017
பொதுஅறிவு
இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரம்
- சப்பாத்திக்கள்ளி
* மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம்
- கீழாநெல்லி
15.07.2017
வெட்டுக்கிளி
வெட்டுக்கிளி ஒரு பூச்சியினம். நீண்டு மடங்கிய பின்னங்கால்களை உடைய, பச்சை நிறப் பூச்சி. வெட்டுக்கிளி பல்வேறு நிறங்களில் உள்ளன. புல், இலைகள் போன்றவற்றை உண்டு வாழும். பயிர்ச் செடிகளுக்குக் சேதம் விளைவிப்பதால் இது உழவர்களின் எதிரி என்று அறியப்படுகிறது.
ஓரெழுத்துச் சொற்கள்
ஆ -----> பசு
ஈ-----> பறக்கும் பூச்சி
ஈ-----> பறக்கும் பூச்சி
ஓ -----> வினா
கா -----> சோலை
கை -----> கரம்
கோ -----> அரசன். இறைவன்
சா -----> இறப்பு, மரணம்
சீ -----> இகழ்ச்சி
தா -----> கொடு,கேட்பது
தீ -----> நெருப்பு
தை -----> மாதம்
தை -----> மாதம்
நோ -----> நோவு
பா -----> பாட்டு
பூ -----> மலர்
பை -----> உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய
மை -----> கண்மை
வா -----> அழைத்தல்
வை -----> வைதல், வைத்தல்
09.01.2017
மண்புழு
இது உழவர்களின் நண்பன் என்று புகழப்படுகிறது. ஏனெனில், தாவரக்கழிவுகளை உண்டு, அதனால் அதன் உடலிலிருந்து வரும் கழிவால், அதன் வாழிட மண்ணைவளப்படுத்துகின்றன.
04.09.2016
ஒட்டகச் சிவிங்கி
நீண்ட கழுத்தும், நீண்ட கால்களும் கொண்ட ஆப்பிக்காவில் காணும் விலங்கு. உலகின் மிக உயரமான விலங்கினம் இதுவாகும். ஒட்டகச் சிவிங்கிகளின் அடி வயிற்றைத் தவிர்ந்த ஏனைய உடல் முழுதும் புள்ளிகள் காணப்படுகின்றன. புள்ளிகளின் அமைப்பு ஒவ்வொன்றுக்கும் தனித்துவமானவை. இவை நீண்ட நீல நிற நாக்கினைக் கொண்டுள்ளன. இவற்றின் முன்னங்கால்கள் பின்னங்கால்களைவிட நீளமானவை.
12.06.2016
வெண்சங்கு
சங்குகள் கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. கடலின் அடிமட்டத்தில் சுமார் 20 முதல் 25 அடி ஆழமுள்ள பகுதிகளில் வாழ்கின்றன.இந்த இடங்கள் சங்குப் படுகைகள் என்று அழைக்கப்படுகின்றன
03.05.2016
முத்துச்சிப்பி
கடலுக்குள் ஓடுகள் பெற்றுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் முத்துச்சிப்பி
12.04.2016
- இலங்கையின் முக்கிய நிலையங்கள்
1. கலாசார முக்கோண வலயம் - கண்டி, அனுராதபுரம்,பொலநறுவை
2. சீனித் தொழிற்சாலை – கந்தளாய்
3. காரீயச் சுரங்கம் - போகலை
4. புற்றுநோய் வைத்தியசாலை - மகரகம
24.03.2016
- இலங்கையின் முக்கிய நிலையங்கள்
1. செய்மதி தகவல் தொடர்பு நிலையம் - பாதுக்கை
2. புடைவைக் கைத்தொழில் நிலையம் - வியாங்கொடை, பூகொட
துல்கிரிய
3. எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம் - சப்புகஸ்கந்த
14.02.2016
பறவைகளில் ஆந்தைக்கு மட்டுமே மனிதர்களைப்
போல இரண்டு கண்களும் முகத்தின் முன்புறத்தில் இருக்கின்றன.
07.02.2016
பச்சையம் இல்லாத தாவரம் காளான்.
30.01.2016
வேப்பமரத்தின் மாற்றுப் பெயர்கள் அரிட்டம், துத்தை, பரிமதரம்,
பின்மந்தம், வாதாரி, அருட்டம், அருணாவதி, கடிப்பாறை, கேசமுட்டி,
பூமாரி, புயாரி, மந்தமரம் ஆகியனவாகும்.
24.01.2016
ஆண்டு விழாக்கள்
30 ஆண்டு - முத்து விழா
40 ஆண்டு - மாணிக்க விழா
50 ஆண்டு - பொன் விழா
60 ஆண்டு - வைர விழா
75 ஆண்டு - பவள விழா
100 ஆண்டு - நூற்றாண்டு விழா
17.01.2016
ஆண்டு விழாக்கள்
9 ஆண்டு - மண் கலச விழா
10 ஆண்டு - தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு - எஃகு விழா
12 ஆண்டு - லினன் விழா
13 ஆண்டு - பின்னல் விழா
14 ஆண்டு - தந்த விழா
15 ஆண்டு - படிக விழா
20 ஆண்டு - பீங்கான் விழா
10.01.2016
ஆண்டு விழாக்கள்
1 ஆண்டு - காகித விழா
2 ஆண்டு - பருத்தி விழா
3 ஆண்டு - தோல் விழா
4 ஆண்டு - மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு - மர விழா
6 ஆண்டு - சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு - கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு - வெண்கல விழா
03.01.2016
பாலும் முட்டையும் நிறை உணவாகும்.
26.11.2015
நாய், பூனை போன்றன இடம்பெயரும்போது குட்டிகளை வாயில் கௌவிச் செல்லும்.
19.11.2015
அகத்தி, இப்பில் போன்ற மரங்களின் இலைகள் இரவில் சுருங்கும்.
12.11.2015
மின்குமிழைக் கண்டுபிடித்தவர் தோமஸ் அல்வா எடிசன்.
05.11.2015
சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் உண்டு. ஆனால் சூரிய ஒளிபடாத தாவரம் மஞ்சள் நிறமடையும்.
30.10.2015
மனித உடலின் என்புகளின் எண்ணிக்கை 206.
23.10.2015
மழை பெய்யும்பொது மழையில் நனையும் பிராணி - எருமை
16.10.2015
தாவர எண்ணெய் வகைகளிலிருந்து மாஜரின் பெறப்படும்.
09.10.2015
பச்சையாக உண்ணும் பழங்களைத் தூய நீரில் கழுவி உண்ண வேண்டும்.
02.10.2015
கண் தெரியாதோர் பயன்படுத்தும் உபகரணம் - வெள்ளைப் பிரம்பு
25.09.2015
மின்குமிழைக் கண்டு பிடித்தவர் தோமஸ் அல்வா எடிசன்
18.09.2015
தோட்டங்களில் பூச்சிகள் வராமல் இருக்க செவ்வந்திச் செடிகள் நடுவர்.
நாம் சரியான மெய்நிலையில் நடக்கும்போது நிலத்தில் முதலில் படுவது - குதிக்கால்
04.09.2015
மாட்டிலுள்ள உண்ணியை உண்ணும் விலங்கு - கொக்கு
28.08.2015
துருப்பிடித்த ஆணி குற்றினால் அவித்துக் குடிப்பது மரமஞ்சள்
21.08.2015
உழவனின் நண்பன் - மண்புழு
மண்புழு ஈரமான மண்ணிணுள் வாழும். இது தோல் மூலம் சுவாசிக்கும்.
07.08.2015
பாலைவனக் கப்பல் - ஓட்டகம்
ஏழுசகோதரிகள் - புழுனி
17.07.2015
கார்த்திகைப்பூ - காந்தள் மலர், கலப்பைக்கிழங்கு
கார்த்திகைப்பூ - காந்தள் மலர், கலப்பைக்கிழங்கு
05.05.2015
பாம்பு இனங்கள் உடலை வளையம்போல சுருட்டி அதன் மீது தலைவைத்துப் படுத்திருக்கும்.
ஆனால் உறங்கும் போதும் பாம்புகளின் கண்கள் திறந்தே இருக்கும்.
28.04.2015
காளான்
- உணவுக்காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப்பயன்படுகின்றன.
- பென்சிலின் என்ற மருந்து செய்ய பெனிசிலியம் (Penicillium) எனப்படும் நுண்ணிய பூஞ்சைக்காளான் பயன்படுகின்றது.
20.04.2015
குறிஞ்சிமலர் 12 ஆண்டுக்கொருமுறை பூக்கிறது
12.04.2015
வான்குடைகள் மக்கள், சரக்குகள், உணவு, வெடிகுண்டுகள் என பலதரப்பட்ட பொருட்களை வான்வெளியிலிருந்து பூமிக்குக் கொண்டு வர பயன்படுத்தப்படுகின்றன. இவை பரசூட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்.
அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை,நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம்.
01.04.2015
அந்திமந்தாரை அல்லது அஞ்சு மணி பூ என்பது பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூ. இந்தப் பூவில் பல வகை உண்டு. அவை பல்வேறு வண்ணங்களில் பூக்கும். இவற்றைப் பத்திராட்சைப் பூ என்றும் கூறுவர்.
இந்த தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும்.
23.03.2015
ஆத்திசூடியை இயற்றியவர்
ஔவையார்
16.03.2015
அடைகாக்கத் தெரியாத பறவை
குயில்
09.03.2015
முட்டாள் பறவை என வர்ணிக்கப்படுவது
வான்கோழி
02.03.2015
சத்தமிடாத விலங்கு ஒட்டகச்சிவிங்கி.
25.02.2015
கடற்குதிரை என்பது குதிரை அல்ல. அது ஒரு மீன் ஆகும். இது நிமிர்ந்தே நீந்தும்.
18.02.2015
மயில்களில் ஆண்மயிலே தோகை விரித்தாடும்.
தங்கத்தாத்தா என அழைக்கப்படுபவர் நவாலியர் சோமசுந்தரப் புலவர்.
04.02.2015
வௌவால்
பறக்கும் பாலூட்டி விலங்கு
வௌவால் ஆகும்.
இது பழங்களை உண்ணும். வௌவால் தன் வாய் வழியாக உண்ட உணவு சமிபாடடைந்த பின், வாய் வழியாகவே கழிவை வெளியேற்றுகிறது. இதன் ஒலி மீயொலி ஆகும்.வௌவாலின் கழிவுகள் குயானோ என்று அழைக்கப்படுகின்றது. இதில் அதிக அளவு புரத சத்து உள்ளது. அதனால் இது ஒரு நல்ல உரமாக பயன்படுகிறது
...................................................................................................................................................................
24.01.2015
பருந்து
ஒரு பருந்துக்கு ஆயுட்காலம் எழுபது வருடங்கள்.
ஆனால் நாற்பது வருடத்தில் அதன் அலகுகளும் கால் நகங்களும் இறக்கைகளும் பலமிழந்து விடுகின்றன. அதற்காக அந்தப் பருந்துக் கூட்டம் சோர்வடைந்து போவதில்லை. அவை தனது அலகுகள் பலமிழந்தவுடன் நேராக மலைக்குப் பறந்து செல்லுமாம். அங்கே மலையிலே தனது அலகை மோதி மோதி உடைத்து விடுமாம்.
சிறிது நாளில் புது அலகுகள் வளர்ந்துவிடும். பின்பு அந்த அலகால் தனது கால் நகங்களையும் இறக்கைகளையும் கொத்தி கொத்திப் பிடுங்கி விடுமாம். அவையும் சிறிது நாளில் புதிதாக வளர்ந்து விடும். அதன் பின்பு அந்த பருந்து முப்பது வருடங்கள் வாழுமாம்.
...................................................................................................................................................................
17.01.2015
பல்லியானது தன்னை எவராவது தாக்க முற்பட்டால், தமது வாலை கழற்றிவிட்டு தப்பிச்செல்லும்.
அதை தாக்க வரும் பிராணிகளை தனது துண்டிக்கப்பட்டுத் துடிக்கும் வாலால் ஏமாற்றி விட்டு ஓடிவிடும்.
...................................................................................................................................................................
10.01.2015
நுளம்புகளில் பெண்நுளம்புகளே குருதியைக் குடிக்கும்.
No comments:
Post a Comment