இடிதாங்கி
|
இடிதாங்கி என்பது கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் இடி, மின்னல் தாக்காமல்
இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கருவியாகும். இதன் முனைப்பகுதி காந்தச் சக்தியால்
ஆனது. இந்தக் கருவியைக் கட்டடத்தின் உயர்ந்த பகுதியில் வைத்து தடித்த காப்பர்
பட்டையின் மூலம் பூமியில் எர்த் செய்து விடுவார்கள். இடி தாக்கும்போது இடிதாங்கி, மின்னலை ஈர்த்து பட்டை
வழியாக பூமியைச் சென்றடைகிறது. இதனால், கட்டடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதோடு சேர்ந்து நாமும்
பாதுகாக்கப்படுகிறோம்.
இடி மின்னலில் உண்டாகும்
மின்சாரம் பல இலட்சக்கணக்கான ஓல்ட் அழுத்தமுடையதாகக் காணப்படுகிறது. இந்த உயர்ந்த
அழுத்த மின்சாரம் நம்மையும், கட்டடங்களையும் தாக்குவதால்
பேரிழப்பு ஏற்படுகிறது.
நாலடியார்
.
1.
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்
தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.
2.
இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.
3.
சமண முனிவர்களால்
இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.
4.
இதனால் இது நாலடி
நானூறு எனவும்
பெயர் பெறும்.
5.
'வேளாண்
வேதம்' என்ற
பெயரும் உண்டு.
6.
பலநேரங்களில்
இது புகழ்
பெற்ற தமிழ்
நீதி நூலான
திருக்குறளுக்கு
இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது
7.
.பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்
உள்ள ஒரே தொகை நூல் நாலடியார்
ஆகும்.
8.
இந்நூல் முத்தரையர் எனும் பிரிவினைப்
பற்றி கூறும் நூல் ஆகும்.
9.
எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு
நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.
10.
இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி
பெயர்த்துள்ளார்.
11.
நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய
ஒரே முறையைப் பின்பற்றுகின்றன.
12.
திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும்
முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.
13.
திருக்குறள்
இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.
14.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்பதில் நாலும் என்பது நாலடியாரைக் குறிக்கும்.
15. . ‘மனத்தளவில்
உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும்
கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.’ என்பது நாலடியார் தரும் கருத்தாகும்.
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
'பாட்டுக்கொரு புலவன் பாரதியடா' என அனைவராலும் பாராட்டப்பட்ட பாரதியார், சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார் . 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால் பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார். தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார்.
இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டயபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர் 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.
பாரத தமிழ்,ஆங்கிலம் இந்தி சமஸகிருதம் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டுஇ நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.. தமிழ் தமிழர் நலன் இந்திய விடுதலை பெண் விடுதலை சாதி மறுப்பு பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்க மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல் பொருள்கொள் யாப்புஅணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி புதுக் கவிதை எனப் புகழப்படும் பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். கேலிச்சித்திரம் எனப்படும் வரையும் முறையைத் தமிழுக்கு முதலில் தந்த பெருமை பாரதியையே சாரும்
பாரதி இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர் உ. வே. சாமிநாதையர் வ. உ. சிதம்பரம் பிள்ளை மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.
தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்' எனக் கவிபுனைந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும் பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் 'பாஞ்சாலி சபதம்' விளங்குகிறது. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது.
1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். பிறகு 1921 செப்டம்பர் 11ம் தேதி தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாட்டுக்கொரு புலவன் பாரதியை மக்கள் 'கவி' 'மானுடம் பாடவந்த மாகவி' 'புது நெறி காட்டிய புலவன்' 'எண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்' 'பல்துறை அறிஞர்' 'புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்' 'தமிழின் கவிதை' மற்றும் 'உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்' என்றெல்லாம் புகழ்கின்றனர். உலகத்தமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது என்றால் அது மிகையாகாது.
விளையாட்டின்
மகிமை
1. விளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும்,
மகிழ்ச்சிக்காகவும், சில வேளைகளில் கற்பித்தல் நோக்கத்துக்காகவும் நடத்தப்படும்
கட்டமைப்புக் கொண்ட ஒரு செயற்பாடு ஆகும்.
2. விளையாட்டு சில சமயங்களில் வேலை என்பதுடன் தொடர்புடையது போல்
காணப்படுகிறது.
3 ஆனால், வேலை ஊதியத்துக்காகச் செய்யப்படுவதுடன் விளையாட்டு ஒரு கலை என்றும்
குறிப்பிடப்படுவது உண்டு.
4.ஆனால் கலையைப்போல் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக விளையாட்டு
இருப்பதில்லையன்றோ!
5. தொழில் முறை விளையாட்டு வீரர்களுக்கு,
விளையாட்டு வருமானத்துக்கான ஒரு தொழிலாகவே உள்ளது எனலாம்.
6. 'ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. கூடி விளையாடு
பாப்பா' என்பது பாரதியின் கூற்று.
7.விளையாட்டு அனைத்து மனிதர்களும் இயல்பாக விரும்பி ஈடுபடும்
செயற்பாடுகளில் ஒன்று.
8. கணினியின் தொழில்நுட்பம் வளர்சியடைந்ததின் பயனாக. கணினி
விளையாட்டுகளும் முன்னேறி வருகின்றன.
9. 1990களின் இறுதியில்இ இணையம் மூலமாக விளையாடப்படும் விளையாட்டுகளும் தமது
பங்கிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றன.
10. தொடக்கத்தில். மோட்டார் சைக்கிள் பந்தயத்தை விரும்பி விளையாடிய மக்கள். காலப்போக்கில்
பல்வேறு விளையாட்டுகளையும் விளையாட ஆரம்பித்தனர்.
11.விளையாடுவதால் மனிதன் உடல் நலத்தையும். மன நலத்தையும். சமூக
நலத்தையும் பெறலாம்.
12. விளையாட்டுகளை விளையாடுவதால் ஒற்றுமை வளர்கின்றது.
13.விளையாட்டுகளை விளையாடுவதால் ஒவ்வொருவரிடமும் தலைமைத்துவத்தன்மை
வளர்கிறது.
14. தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன் வளர்வதுடன், தன்னம்பிக்கை மேலோங்குவதும் விளையாட்டின் மகத்துவமன்றோ!
15.அத்துடன் விளையாட்டானது விளையாடுபவர்களை மகிழ்ச்சியாக
வைத்திருப்பதுடன் பிரச்சினைகளைத் தீர்க்கவும். அறிவாற்றலை பெருக்கவும் கற்றுக்
கொடுக்கின்றது என்றால் மிகையாகாது.
No comments:
Post a Comment