நகைச்சுவை..

சிரிப்பே பெரிய வரம்!
பிற விலங்குகளிடம் இல்லாத, அதேசமயம் மனிதனுக்கு மட்டுமே இருக்கும் ஒரு மிகப்பெரிய அதிசயம் நகைச்சுவை உணர்வு. எனவே, உங்கள் குழந்தை, நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்வதை உறுதிசெய்வதும் பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்று. தன் வயதொத்த பிள்ளைகளிடம் சிரித்து விளையாடி மகிழ்வது, குழந்தைகளின் மனவளர்ச்சிக்கு தேவையான ஒன்று. இன்றைய நமது கல்விமுறை, குழந்தைகளின் சந்தோஷ வாழ்வையே அளிப்பதாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

உள்ளே நான் வாசித்து இரசித்த  நகைச்சுவைகளும், அதனைத்   தொடர்ந்து துணுக்குகளும் உள்ளன. வாசித்து இன்புறுங்கள்.

...............................................................................................................................................

ஆசிரியர் - முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?

மாணவன்- நாங்கள் எல்லாம் முட்டாள்கள் சார். எங்களை அடிப்பதனால் நீங்கள் அடிமுட்டாள் சார்.

...............................................................................................................

ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது?

மாணவன் : தெரியாது சார்!

ஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி

நில்லுடா..!

மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்?

..................................................................................................................

ஆசிரியர்: ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

 பாபு: வளையும் சார்
ஆசிரியர்: எப்படி?

பாபு: எங்க தாத்தாவுக்கு ஐந்து வயசில் முதுகு வளையவில்லை. ஆனால் 50 வயசில்  வளைஞ்சுவிட்டது சார்!

...............................................................................................................

வரலாறு டீச்சர்:- பாபு, எங்கிருந்து எங்குவரை முகலாயர்கள்      ஆண்டார்கள்?
Image result for laughing children gifs animated
சுட்டிப்பாபு:-      16ம் பக்கத்திலிருந்து 25ம் பக்கம் வரைக்கும் டீச்சர்!
...................................................................................................................................................................

ஆசிரியர்: கோழி ஏன் முட்டை போடுது?

மாணவன்: ஏன்னா அதுக்கு 1, 2, 3 போட தெரியாது!!

...................................................................................................................................................................

  • ஆசிரியர் -      பூனை   எலியைக்     கடித்துக்              கொன்றது.   இது   என்ன    காலம்னு       சொல்லு?

      மாணவன்-   கடி காலம் சார்.

...................................................................................................................................................................
Image result for laughing children gifs animated
  • அப்பா-   ஏன் றிப்போட்டில ஒரு மார்க்     வாங்கிட்டுவந்திருக்கே?

      மக - விலை வாசி ஏறிப் போச்சு  ..எதையுமே வாங்க முடியல..

..................................................................................................................................................................

நண்பன் 1 ; மச்சான் 100 கார் இருந்தும் எங்க அப்பா நடந்து போறாருடா  

நண்பன் 2 ; ஏன்டா ? 

நண்பன் 1 ; ஏனென்றால் ஒரு கார் கூட அவரது இல்ல அதாண்டா

...............................................................................................................................................................................................................

ஆசிரியர் : ஏன்டா உன் புத்தகங்களை எல்லாம்   பக்கத்து மேசையில

வச்சிட்டு நீ வந்து   இங்க உட்கார்ந்திருக்க?

மாணவன் :நீங்க தானே சார் பிரச்சினைகளை தள்ளிவைக்கணும்னு சொன்னீங்க?

...................................................................................................................................................................

மகன்  -  பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது   சரிதான் போல..

அப்பாஎன்னடா சொல்ற?

மகன்- பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா வீட்டுவேலை செய்து  தர்றீங்க. வாத்தியார்  என்னை அடிக்கிறாரு.

...................................................................................................................................................................

ஆசிரியர்   ---  ஏன் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கிவந்து வச்சிருக்க?

மாணவன்----  நீங்கதானே சார் சொன்னீங்க? 

ஆசிரியர்   ----  நா‌ன் எ‌ப்போ சொ‌ன்னே‌ன்?

மாணவன்---- உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்குப் பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.

......................................................................................................................................................

அது குரங்கின் வேலை

கல்லூரியில் தமிழாசிரியர் உள்ளே நுழைகிறார் , மாணவர்களை பார்த்து ஆரம்பிக்காலமா ?என்றார்.

 ஒரு குறும்புகார மாணவன்:-  அது குரங்கின் வேலை. நீங்க ஏன் அந்த  வேலையைச் செய்யப் போகிறீர்கள்?     என்றான்.

சிரியர் யோசிக்க மாணவன் -   ஆரம் என்றால் மாலை என்று பொருள் எனச் சென்ற வகுப்பில்தான் சொன்னீர்கள் 

மாலையைப்  பிக்காலமா  என்றால்????(ஆரம்     பிக்காலமா)
.................................................................................................................................................................................................................................................

ஒருவன்                     :   டேய்! ஏன்டா காற்றாடியை நிறுத்திட்ட?

மற்றொருவன் : எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,வியர்வை சிந்திச் சாப்பிடணும் என்று!

..
..................................................................................................................................................
ஒருவர் பெங்களூருக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.பெங்களூர்
வந்தவுடன்,
பயணி [சத்தமாக…] “Banglore Banglore Banglore Banglore”
கண்டக்டர்: பி சைலண்ட்…..
பயணி- : “Anglore Anglore Anglore Anglore”
.................................................................................................................................................................................................................................................

ஒருவர் -- சார் கள்ள நோட்டை எப்படி அடையாளம்
கண்டுபிடிக்கிறதுன்னு   உங்களுக்கு தெரியுமா ?'

மற்றவர் -   தெரியாதே !

- ரொம்ப நல்லதா போச்சு இந்த நூறு ரூபாயை மாற்றிக் கொடுங்க!!

................................................................................................................................................................................................................................................

திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...

அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?

...............................................................................................................................................................................................................................................

கன்ட்ரக்டர் : படியில நிக்காதப்பா...!பஸ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே ...உள்ள வாப்பா...!

ஸ்டுடண்ட் : எனக்கு நீச்சல் தெரியாதுங்கோ...நான் கரையிலே நின்னுகிறேன்..

J
................................................................................................................................................................................................................................................

வாத்தியார் : என்னடா கொப்பியில பால் - 15 ரூபாய், அரிசி 40 ரூபாய்னு எழுதி வச்சிருக்கே..
மாணவன் : நீங்க தானே வாத்தியார் சொன்னீங்க.. நாளைக்கு வரும் போது வீட்டுக் கணக்க மறக்காம எழுதிக்கிட்டு வரணும்னு..
வாத்தியார் :...?
................................................................................................................................................................................................................................................

ஆசிரியர் : ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும் முன்பு கடவுளிடம் பிரார்த்தனை செய்த பிறகு சாப்பிடுங்கள்...
மாணவன் : அவசியமே இல்லைங்க சார்.. எங்க அம்மா நல்லாத்தான் சமைப்பாங்க..
................................................................................................................................................................................................................................................

ஆசிரியர்--ஒரே ஒரு எலி வருடத்தில் நூற்றுக்கணக்கான குட்டிகளைப்     போடும்.

மாணவன்--  ஒரு சந்தேகம் சார் ... “அது திருமணம் செய்து கொண்டால் இரண்டுமாகச் சேர்ந்து எவ்வளவு குட்டிகள் போடும்?”

................................................................................................................................................................................................................................................

ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள். 

சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, "இறந்து விட்டான்" என்று சொன்னார்.

அடிபட்டவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே, "டாக்டர்... நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்றான்.

அருகிலிருந்த அவனுடைய மனைவி, "பேசாமல் இருங்க... டாக்டருக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது" என்றாள்.

...............................................................................................................................................................................................................................................

ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளை உன் அப்பாவைக் கூப்பிட்டு வா...

மாணவன்: அவர் படம் பார்க்கலே சார்... கதையை நான் சொல்றேன்..

..............................................................................................................................................................

ஆசிரியர்: எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற ஒரு பையன் நேற்று ஒரு கேள்விக்கு சரியாகப் பதில் சொல்லி விட்டான்...

மாணவன்: என்ன கேட்டீங்க...?

ஆசிரியர்: ஆந்தைக்கு பகல்ல கண் தெரியுமான்னு கேட்டேன். தெரியாது...ன்னுட்டான்.

...............................................................................................................................................................................................................................................

நீங்க எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கனும்

எங்க வீட்ல நாலு டம்ளர் தானே இருக்கு டாக்டர்
.................................................................................................................................................................................
நகைச்சுவைக்கதை
குறும்பான சிறுவர்கள்

ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர். ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில் விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். 
   
    ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும். கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான்.
   
    அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது. 

...............................................................................................................................................................................................................................................

துணுக்கு

அறிவியல் துணுக்கு

  • மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
  • கெட்டுப்போகாத‌ உண‌வுப்பொருள் ‍ தேன்
  • கிளியும் முய‌லும் த‌ங்க‌ள் பின்னால் இருப்ப‌தை த‌லை 
             திருப்பாம‌ல் காண‌முடியும்.
    • ப‌னிக்க‌ர‌டிக‌ள் ஒரே அம‌ர்வில் 86 பென்குயின்க‌ளை விழுங்குமாம்.
    ...............................................................................................................................................

    விகடத்துணுக்கு

    ஆசிரியர்:தேர்வுகளில் ஏன் பெண்கள் மட்டும்அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்?

    மாணவன்:மதிப்"பெண்கள்"என்றுதான் சொல்லுகிறோம். மதி "ஆண்கள்"என்று கூறுவதில்லை!

    9 comments: