புலுனி
உள்நாட்டுப் பறவை, விவசாயிகளின் தோழன் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் ஒரு பாலமாகக் காணப்படுவதுடன் ஒற்றுமையுடன் வாழுகின்ற ஓர் பறவையாகும். வேறு பெயர்கள்: ஏழு சகோதரிகள் (Seven sisters)
TANGRAM – சீன புதிர் விளையாட்டு
Tangram என்ற சீன புதிர் விளையாட்டு 5000 வருடங்களுக்கு முந்தியதாகும். இதனை விளையாடுவதற்கான தகைமை ஆர்வம் மட்டுமே, சிறுவர்களின் கற்பனை வளத்தை பெருக்கவல்லது இவ் விளையாட்டு.
ஒரு சதுரமான அட்டையை இங்கு காட்டியது போல் 7 துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக், இரப்பர், மரத்துண்டு என்பனவற்றிலும் வெட்டிக்கொள்ளலாம்.
இந்த 7 துண்டுகளையும் பயன்படுத்தி உருவங்களை உருவாக்க வேண்டும் எந்த ஒரு துண்டையும் மிகுதியாக வைக்கக்கூடாது என்பது முக்கியம். அத்துடன் ஒரு துண்டின் மேல் இன்னொரு துண்டை வைக்கக் கூடாது. பக்கத்தில் தான் வைக்க வேண்டும்.
பறவைகள், மிருகங்கள், கருவிகள், மனித உருவங்கள் , என இதன் மூலம் 1600 க்கும் அதிகமான உருவங்களை உருவாக்கலாம் எனக் கூறப்படுகிறது
காளான்
உள்நாட்டுப் பறவை, விவசாயிகளின் தோழன் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் ஒரு பாலமாகக் காணப்படுவதுடன் ஒற்றுமையுடன் வாழுகின்ற ஓர் பறவையாகும். வேறு பெயர்கள்: ஏழு சகோதரிகள் (Seven sisters)
TANGRAM – சீன புதிர் விளையாட்டு
- காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும்.
- காளான்களுக்கு மற்ற தாவரங்களைப் போல இலை, பூ, காய் என்று எதுவும் இல்லை.
- எனவே, விதைத்தூள் மூலம் மட்டுமே காளான்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.
- பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவானக் காளான் உள்ளது.
- இது பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது.
- இயற்கையாக வளரும் காளான்களைப் பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர்.
- பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது.
- மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவு ம் பெறலாம்.
- பென்சிலின் என்ற மருந்து செய்ய பெனிசிலியம் (Penicillium) எனப்படும் நுண்ணிய பூஞ்சைக்காளான் பயன்படுகின்றது
- காந்தம்பற்றிய சில தகவல்கள்…
1. காந்த விசைக்கோடுகள் வட முனையில் தொடங்கி தென் முனையில் முடிவடைகின்றன.
02 . காந்த விசைக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்வதில்லை.
03 . காந்த விசைக்கோடுகள் மற்ற பகுதியைக் காட்டிலும் முனைகளின் அருகில் அதிக செறிவுடன் இருக்கும்.
04 . காந்தத்தைச் சுற்றி அமைந்திருப்பது காந்தப்புலம்.
05 . இரும்பு ஒரு மென்காந்தப் பொருள்.
06 . காந்தக் கேடயமாகப் பயன்படும் பொருள் தேனிரும்பு.
07 . காந்த ஒதுக்கத்தை அளக்கப் பயன்படும் கருவி கியூ காந்தமானி.
08 . காந்தக் கேடயத்திற்கு புவிக் காந்தப் புலம் கிடையாது.
09 . தற்காலிக காந்தம் – இரும்பு.
கலையுருக்காட்டி
இது கண்ணாடிகளை உட்பக்கம் கொண்டதுடன் அதற்கு நடுவில் உள்ள நிறம் கொண்ட அழகிய பொருட்கள் மூலம் விந்தையான உருவங்களைத் தோற்றுவிக்கும் ஒரு கருவியாகும். இதன் ஒரு முடிவிலிருந்து பார்வையாளர் நோக்கும் போது எதிர்ப்பக்கத்தில் இருந்து வரும் ஒளி சமச்சீர் அமைப்புடைய வடிவியல் சார்ந்த உருவங்களை ஒளித்தெறிப்பு மூலம் உருவாக்கும். கலையுருக்காட்டியைப் பார்த்துக்கொண்டே உருளச் செய்வதன் மூலம் முடிவற்ற சமச்சீரான வடிவமைப்புகள் தோன்றும். இது 1817 இல் கண்டுபிடிப்பாளர் டேவிட் பிரூச்டர் ஆல் கண்டுபிடிக்கப்பட்டது. இது பன்னுருக்காட்டி என்றும் அழைக்கப்படும்.
நெருப்புக்கோழி
உலகிலேயே மிகப்பெரிய பறவை நெருப்புக்கோழி. இவை எட்டு அடி வரை வளரக்கூடியவை. பறக்க முடியாதவை. நெருப்புக்கோழிகள் நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை. மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. ஆப்பிரிக்க பாலைவனங்களிலும், சவானா புல்வெளிகளிலும் காணப்படுகின்றன. நெருப்புக்கோழி இடும் முட்டைகள் அளவில் பெரிய முட்டைகளாகும். பகலில் பெண் பறவையும், இரவில் ஆண்பறவையும் முட்டைகளை அடைகாக்கும்.
செண்பகம்
கறுப்பு உடலையும் காவிநிற செட்டைகளையும் கொண்ட செண்பகம் காகத்தை விட சற்றுப் பெரியது.இதன் கண்கள் சிவப்பு நிறமானவை. நமது சூழலில் இவை தத்தித் தத்தி திரிவதை நாம் காணலாம். நத்தைகள், பூச்சிகள், அட்டைகள், தவளைகள், பாம்புகள், ஓணான்கள், மயிர்கொட்டி செண்பகத்தின் உணவுகள் ஆகும்.
ஆட்காட்டிக்குருவி
ஆட்காட்டிக்குருவி
இப்பறவை ஆள் அரவம் கேட்டால் டிட்டிட்யூட்டிட் என்று ஒலிப்புக்கொண்டு பறந்துவிடும். ஆகையால் ஆள் வரவைக் காட்டிக்கொடுத்துவிடும். ஆகவே ஆட்காட்டி எனப்படுகிறது.
கானேசன் பூ
கானேசன் பூ
நத்தை
உயர்ந்த மலைப் பகுதிகளிலும், பாலைவனங்கள், அடர்ந்த காடுகளிலும் இவை காணப்படும். இவை தமது தலைப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு ஜோடி உணர்கொம்புகளைக் கொண்டு இருக்கின்றன.
குயில்
குயில் காகத்தைவிட சற்று சிறியது. ஆனால், உருண்டு திரண்டிருக்கும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வால் நீண்டிருக்கும். ஆண் குயில் கறுப்பாக இருக்கும். பெண் குயிலின் அடிப்படை நிறம் வெள்ளை. ஆனால், உடல் முழுவதும் கறுப்புத் திட்டுகள் முத்து முத்தாகக் காணப்படும்.
பொதுவாக, குயில்கள் தனியாகப் பறந்து செல்லும். கிளிகள் போன்று கூட்டமாகப் பறந்து செல்லாது. ஆண் குயிலை எளிதில் பார்க்கலாம். பெண் குயிலை அரிதாகவே பார்க்க முடியும். மரக்கிளைகளின் ஊடே மறைந்திருக்கும். ஆண், பெண் இரண்டுமே வெட்கப்படும் பறவைகள் சோம்பேறிப் பறவைகள். மரங்களில் மறைந்திருந்து தூங்கிக்கொண்டிருக்கும். குயில் அழகாக பாடும் பறவை. இது வசந்த காலத்தில் கூவும்.
இரவில் இரை தேடும் ஒரு சிறு பாலூட்டி விலங்கு.உருவத்தில் இது சிறியது.பூச்சிகளையும், பறவை முட்டைகளையும், சிறு பல்லிகளையும் உண்ணும். சில சமயங்களில் இலை தழைகளையும் உண்ணும். இவ்விலங்குகள் பெரும்பாலும் அடர்ந்த மரங்கள் கொண்ட காடுகளில் வாழ்கின்றன
........................................................................................................................................................................................................................
மரநாய்
மரநாய்சிறியவகைஉயிரினங்களான எலிகள், அணில், பூனை, பாம்பு, கோழிகள் அவற்றின் முட்டைகள், சிறிய முயல் ஆகியவற்றைக் கொன்றுஉண்ணும்.இவைஅழுகிய மரங்களின் அடிப்பாகம், பாறைகள் ஆகியவற்றில் இருக்கும்.
இவை மிக வேகமாக அழகான அமைப்பில் வளைகளை உருவாக்குகின்றன. வளையின் வாய்ப்பாகம் புற்களுக்கு மத்தியில் இருக்கும். அது உலர்ந்த சருகுகளால் மூடப்பட்டிருக்கும் இவை வேட்டையாடுவதில் மிகவும் வல்லவை.
மெலிந்த உடல் காரணமாக இவை விரைவாக ஓடும். மிகச் சிறிய சந்துகளிலும் நுழைந்து செல்லும். மரநாய் மிகவும் தைரியமான விலங்கு ஆகும்.
..............................................................................................................................................................................................................
..............................................................................................................................................................................................................
அழுங்கு(ஆமடில்லா)
அழுங்கு தாடையில் பல்லில்லாத ஒரு மிருகம். எதிரிகளைக்
கண்டால் அழுங்கு தன் தலையைச் சுருட்டிக் கொள்ளும். இது
ஆங்கிலத்தில் ஆமடில்லா என அழைக்கப்படுகிறது.
இவைகள் புற்றுகளிலுள்ள எறும்புகளையும்,கறையான்களையும், ஈசல்களையும் மட்டுமே உண்பதால் இதற்கு எறும்பு தின்னி அல்லது எறும்புண்ணி என்று பெயராயிற்று. இதன் மேற்பரப்பு செதில் செதிலாக இருப்பது சிலருக்கு அருவருப்பை ஏற்படுத்துகிறது.
No comments:
Post a Comment