உலகெங்கும் உள்ள தமிழ்ச்சிறுவர்கள் வாசித்துப் பயன்பெறுவதற்கேற்ற இணையத்தளம்
...................................................................................................................................................................
27.04.2016 அன்று ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான “தென்சிட்டு“ என்னும் எனது இறுவட்டு ஆக்கமானது தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.சு.கிருஸ்ணகுமார் அவர்களினால் வெளியீடு செய்யப்பட்டது. இதில் 45 இறுவட்டு மென்பொருளாக்கங்கள் உள்ளடங்கியுள்ளன. தரம் 1 புதிய பாடத்திட்டத்திற்கமையவும் இது ஆக்கப்பட்டுள்ளது.
................................................................................................................................................................
2014ஆம் ஆண்டு தரம் ஒன்று மாணவர்களுக்கு வாசிப்புத்திறனை மேம்படுத்த தேடலுக்காக வாண்மை(இவ்விணையத்தளம்), சைவம் ஆகிய இணையத்தளங்களினூடாக கற்பித்தலை மேற்கொள்ளும் செயற்பாடானது கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி நிர்வாகப் பிரிவினால்(NIE) பாடசாலைமட்ட ஆசிரியர் அபிவிருத்தித்திட்டத்தில் (SBTD) வெற்றிகரமான வகுப்பறைச் செயற்பாடாகத் (CLASSROOM BEST PRACTICE) தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்களின் ஆளுமைவிருத்திக்கு அவர்களின் சாதனைகளையும், வகுப்பறை, பாடசாலையில் பங்கேற்றுக் கற்கும் செயற்பாடுகளையும் www.vigneswaram.blogspot.com என்னும் இணையத்தளத்தில் பதிவு செய்து , இணையத்தளங்களைப் பார்வையிடும் முறைகளை பெற்றோர்களுக்கு அறியவைத்துச் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்களுக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தல்
யா / கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம்