புதிர்கள்


வித்தியாசம் கண்டு பிடித்தல்
 




 புதிர்கள்

  1. இரு தந்தைகளும் இரு மகன்மாரும் மீன் பிடிக்கச் சென்றனர். ஒவ்வொருவரும் தலா ஒரு மீன் வீதம் பிடித்தனர். ஆனால் பிடிபட்ட  மொத்த மீன்கள் மூன்றாகும், அது எப்படி?

விடை:-  மகன், தந்தை, பாட்டன் மூவருமே மீன் பிடித்தனர்


  2. வடக்கு வாசல் வீடொன்றின் குசினி மேசையின் மீது கைபிடியுள்ள ஒரு தேநீர்க் கப் இருக்கிறது.குசினி, வீட்டின் வட-கிழக்கு மூலையில் இருக்கிறது. கிழக்குத் திசையை நோக்கி நிற்கும் ஒருவருக்கு அந்தக் கப்பின் கைபிடி வலப்பக்கமாக இருக்கிறது.
கேள்வி: கப்பின் கைபிடி எந்தப் பக்கத்தில் இருக்கிறது?
விடை: கப்பின் கைபிடி அதன் வெளிப்பக்கத்தில் இருக்கிறது.


3.  இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை        இந்தியாவில் அடக்கம் செய்ய முடியுமா?

விடை: முடியாது. அவர் இன்னும் உயிருடனுள்ளார்

 ஓரெழுத்துப்  புதிர்கள்
  • சிரிக்கும் எழுத்து -
  • அழைக்கும் எழுத்து - வா
  •  கேட்கும் எழுத்து - தா
  •  துரத்தும் எழுத்து - போ
  • வெறுக்கும் எழுத்து - சீ
  • உதவும் எழுத்து - கை
  • பூசும் எழுத்து - மை
  • வலிக்கும் எழுத்து -
  • சுடும் எழுத்து  - தீ
  • மலரும் எழுத்து - பூ
    தைப் புதிர்கள்
  •   ஊர்ந்து செல்லும் தை - நத்தை
  • பொருட்களை வாங்கும் தை - சந்தை
  • படுக்க உதவும் தை - மெத்தை
  • அப்பாவைக் குறிக்கும் தை - தந்தை
  • அப்பாவின் சகோதரியைக் குறிக்கும் தை - அத்தை
   பைப் புதிர்கள்
  • கறி சமைக்க உதவும் பை - அகப்பை
  • வயலில் வேலைக்கு உதவும் பை - கலப்பை
  • உணவு உடலில் தங்கும் பை - இரைப்பை
  • மரங்களில் இதுவும் ஒரு பை - இலுப்பை
  • திருடன் வழிப்பறி செய்யும் பை - கைப்பை
  • கறியின் வாசனைக்கு உதவும் பை - றம்பை
 கைப் புதிர்கள்
  • துன்பத்தில் வரும் கை - அழுகை
  • அண்ணனின் இளையசகோதரியைக் குறிக்கும் கை  - தங்கை
  • பெண்ணைக் குறிக்கும் கை - மங்கை
  • சிவனின் தலையில் இருக்கும் கை - கங்கை
  • தாத்தாவின் தலையில் தோன்றுவது -வழுக்கை
  • சிறிய தெருவைக் குறிக்கும் கை - ஒழுங்கை
சிந்தனைப் புதிர்கள்
  • ஆடு கத்தும் மாதம் எது?  - மே
  •  பேசாத மை என்ன மை?  - ஊமை
  •  வறுக்காத வறை என்ன வறை?  - ஏவறை
  • பசியுள்ள மாதம் எது?  - ஐப்பசி  
    • வரி செலுத்தும் மாதங்கள் எவை? - ஜனவரி, பெப்ரவரி
    • வாயில் மலரும்  பூ எது? - சிரிப்பு
    ............................................................................................................................................................................................................
    • ஆசிரியர்   -  முட்டைக்கு நடுவில என்ன             இருக்கு?   
               மாணவன்  1       மஞ்சட் கரு தான்.
           
           மாணவன்  2   - இல்லை.    ட் ”தான் இருக்கு????

    ............................................................................................................

    • தாவரங்கள் ஏன் பச்சையாக இருக்கின்றன?
           பச்சைத் தண்ணீர் ஊற்றுவதால்.
    ..........................................................................................
    • ஒருவன் வேகமாக ஓடி வந்தால் முதலில் எதை வாங்குவான்?
          மூச்சு
    ..........................................................................................

    • ஒருவன் விற்ற எருதுமாடு கன்று போட்டால், கன்று யாருக்கு?
          எருது கன்று போடாது.

    •    பஸ் ஏன் பஸ்ராண்டில் நிற்கிறது.
                 இருக்கத் தெரியாததால்


    .......................................................................................
    புதிரின் விடையைக் கண்டுபிடியுங்கள்.
        1. ஒரு மரத்தில் நூறு குருவிகள் இருந்தன.     ஒன்றைச் சுட்டால் மீதி எத்தனை இருக்கும்? ............................


        2. ஒரு ஆட்டுக்கு மூன்று கால்கள். இரண்டு ஆட்டுக்கு எத்தனை கால்கள்?----------------

        3. ஒரு தெருவில் தாயும் பிள்ளையும் செல்கின்றனர். ஆனால் மற்றவர் தாயின்  மகள் அல்ல. அப்படியாயின் யார்?................................

        4. தோகை விரித்து ஆடும் மயில் 4 அடி உயரத்தில் இருந்து முட்டை இடுகிறது. முட்டை உடையுமா? உடையாதா? 
        ..........................................
         
        தோகை விரித்து ஆடுவது ஆண்மயில். ஆண்மயில் முட்டை இடாது

        மூன்று மீன்கள் புதிர்


        ஒரே தலையை வைத்துக் கொண்டு எப்படி மூன்று மீன்களை வரைவது?
        செய்து பாருங்கள்?


        கணிதப் புதிர்கள்

        • ஒரு கிலோ பஞ்சா, ஒரு கிலோ இரும்பா நிறை  கூட?
        • ஒருநாள் இரண்டு நான்குடன் சேர்ந்து கடைக்குப் போனாராம். மூன்று வெளியே சென்றுவிட வீட்டுக்கு வந்தது யார்?
        • ஒரு விமானம் இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் செல்ல அரை மணித்தியாலங்கள் எடுக்கின்றது. ஆனால் அவ்விமானம் சீனாவிலிருந்து திரும்பி இந்தியாவுக்கு வர 30 நிமிடம் ஆகின்றது. ஏன்?
        • ஒரு பண்ணையில் ஆடு, மாடு, குதிரைகள் உள்ளன. இரண்டைத்தவிர எல்லாம் ஆடுகள். அதே போன்று இரண்டைத்தவிர எல்லாம் மாடுகள். அவ்வாறே இரண்டைத்தவிர எல்லாம் குதிரைகள். அந்தப்பண்ணையில் எத்தனை ஆடுகள், மாடுகள், குதிரைகள் உள்ளன?





        3. ஒரு  குரங்கு  20 அடி உயரம் உள்ள மரத்தில் ஏறத் தொடங்கியது.குரங்கு ஒரு மணி நேரத்திற்கு 3 அடி ஏறுவதும் 2 அடி சறுக்குவதுமாய் இருந்தது.மரத்தின் உச்சியைச் சென்றடைய குரங்கிற்கு எத்தனை மணி நேரம் தேவை பட்டிருக்கும்?

        விடை- 
            
        மொத்தமாக குரங்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு அடி ஏறும்.


        17 அடி ஏற 17 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

        18 
        ஆம் மணியில்  அது உச்சியை தொட்டு விட்டு 18 ஆம் அடிக்கு மீண்டும்  சறுக்கி விடும்.


        ஆதலால், குரங்கு உச்சியை சென்றடைய 18 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.


        ...........................................................................................

        4. ஒரு பூக்கூடையில் உள்ள பூக்கள் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் இரு மடங்காகும்.
        60  நிமிடத்தில் அந்தக் கூடை நிரம்பி விட்டது.
        அரைக்கால் (1/8கூடை நிரம்ப  நிரம்ப எத்தனை நேரம் ஆனது?
           விடை......
        முழுக்கூடை   - 60 நிமிடங்கள்
        அரைக் கூடை -  60 - 10 = 50  நிமிடங்கள் 

        (10 நிமிடங்களுக்கு ஒரு முறை இருமடங்காகும் என்றால்,
        முழு கூடை ஆவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னால் அரைக் கூடை நிரம்பி இருக்கும்)
         கால் கூடை :    50 - 10 = 40 நிமிடங்கள்
        அரைக்கால் கூடை :  40 - 10 = 30 நிமிடங்கள்
        ஆக அரைக்கால் கூடை நிரம்ப  30 நிமிடங்கள் தேவை.
         
        .............................................................................................
        5.மணி சில பூக்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்குச் சென்றான்.
        ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் செல்வதற்கு முன்னால் குளத்தில் முழுகி எழுந்தான்.
        என்ன ஆச்சரியம்! அவன் கையில் இருந்த பூக்கள் இரு மடங்கானது.
        ஒவ்வொரு கோவிலிலும் 8  பூக்களை சமர்ப்பித்தான்.
        மூன்றாம் கோவிலை விட்டு வெளி வரும் போது அவன் கையில் பூக்கள் இல்லை.
        மணி வாங்கிய பூக்கள் எத்தனை?

        விடை
        மணி 7 பூக்கள் வாங்கினான்.
        .................................................................................................................................................................

        1. ஐந்து குதிரைகள் 5 மூட்டை கொள்ளைச் சாப்பிட 5 நிமிட நேரம்    எடுத்துக்கொண்டன என்றால், நூறு குதிரைகள் நூறு மூட்டை கொள்ளைச் சாப்பிட எவ்வளவு நேரம் பிடிக்கும் ?

        புதிர் விடை

        ஐந்து குதிரைகள் ஐந்து மூட்டை கொள்ளைச் ஐந்துநிமிடங்களில் சாப்பிட முடியுமானால், ஒவ்வொரு குதிரைக்கும் ஒரு மூட்டை கொள்ளைச் சாப்பிட ஐந்து நிமிடங்கள் வேண்டும். ஆகவே, நூறு குதிரைகளுக்கும் நூறு மூட்டை கொள்ளைச்  சாப்பிட வெறும் ஐந்து நிமிடங்களே போதும்.


        ஆறு அணில்கள் நாவல்பழக் கொட்டைகளைப் பொறுக்கி ஒரு பெரிய கூடையில் போட்டன. அணில்கள் மிகமிக வேகமாக வேலை செய்ததால் கூடையில் போட்ட ஒவ்வொரு நிமிட முடிவிலும் அந்தக் கொட்டைகள் இரட்டிப்பாகின. பத்தாவது நிமிட முடிவில் அந்தக் கூடை முழுதும் நிரம்பி விட்டது. அந்தக் கூடையை அரை அளவு மட்டும் நிரப்பும்போது, அந்த அணில்கள் எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்?

        புதிர் விடை
        பெட்டிகளில் போடப்பட்ட ஒவ்வொரு கொட்டையின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நிமிட முடிவிலும் இரட்டிப்பாகுமென்றால், பெட்டி அரை அளவு நிரம்ப 9 நிமிடங்களாகும். பிறகு அடுத்த ஒரு நிமிடத்தில் பெட்டியின் அடுத்த அரைப் பகுதியும் நிரம்பிவிடும்.

        ...........................................................................................................................................................................................................................................................

        முன்னொரு ஊரின்பேராம் முதல் எழுத்து இல்லாவிட்டால்
        நன்னகர் மன்னர்பேராம். நடு எழுத்து இல்லாவிட்டால்
        கன்னமா மிருகத்தின்பேர். கடை எழுத்தில்லா விட்டால்
        உன்னிய தேனின் பேராம். ஊரின் பேர் விளம்பு வீரே

        இந்தப் பாடலில் கேட்கப்படும் ஊரின் பெயரைக் கண்டுபிடிக்க முடிகிறதா?


        புதிர்விடை-  
        இங்கு முதல் எழுத்து இல்லாவிட்டல் “துரை”, நடு எழுத்து இல்லாவிட்டால் “மரை”, கடைசி எழுத்து இல்லாவிட்டால் “மது”.

        விடை...என்னவாக இருக்கும்?  “மதுரை”.

        No comments:

        Post a Comment