பாடல்



நடன அசைவுப் பாடல்

1. வண்ண மலரே வண்ண மலரே
விஷயம் தெரியுமா? - உன்
கிண்ண மதுவை வண் டெடுத்து
கிளையில் சேர்க்குது - மரக்
கிளையில் சேர்க்குது.

புள்ளி மானே புள்ளி மானே
புதுமை தெரியுமா? - உன்
கள்ள மில்லாப் பார்வை கண்டு
கணை தொடுக்கிறான் - வேடன்
கண தொடுக்கிறான்.

வெள்ளைக் கறையான் வெள்ளைக் கறையான்
வேடிக்கை அறிவாயோ - உன்
நல்ல புற்றில் பாம்பு வந்து
நடன மாடுது - கபட
நடனம் ஆடுது.

செல்லக் கிளியே செல்லக் கிளியே
சேதி தெரியுமா? - உன்
சொல்லைக் கேட்டு மகிழ்ச்சி கொள்ள,
சிறையில் வைக்கிறான் - மனிதன்
சிறையில் வைக்கிறான்.

ஆற்று மீனே ஆற்று மீனே
ஆபத் தறிவாயோ? - உன்
கூற்று வந்து புழு வடிவில்
காத்திருக்குது - கவனம்
காத்திரு க்குது.


2. பதுங்கிப் பார்க்குதே - புலி
பதுங்கிப் பார்க்குதே,
ஒதுங்கிச் செல்லவே - என்னால்
இயல வில்லையே.

ஆரும் இல்லையே - குரல்
கேட்க வில்லையோ,
பாரில் என்னைப்போல் - ஒரு
பாவி இல்லையே.

வேக மாகவே - குகை
வாசல் நோக்கியே,
சாக டிக்கவே - என்னை(க்)
கூட்டிச் செல்லுதே.

ஆட்டுக் குட்டிநான் - வயது
ஆறு வாரமே,
மீட்க வாருங்கள் - ஐயா
மீட்க வாருங்கள்.


3. குள்ளநரியே குள்ளநரியே
எங்கே போகிறாய்
குறுக்கு வழியில் யாரை
நீயும் மடக்கப் போகிறாய்
வஞ்சகத் தால் தானே
உன் வயிற்றை வளர்க்கிறாய்
நல்ல வனாய் நாடகமும்
நடத்திக் காட்டுகிறாய்

4.  யானை மாமா
    யானை மாமா
    எங்கே போறிங்க

என்னையும் தான்
கோவிலுக்கு
கூட்டி போங்களேன்

குதிரை அண்ணா
குதிரை அண்ணா
எங்கே போறிங்க

கொள்ளு தின்ன
என்னையும் தான்
கூட்டி போங்களேன்

பூனைக் குட்டி
பூனைக் குட்டி
எங்கே போறிங்க

பால் குடிக்க
என்னையும் தான்
கூட்டி போங்களேன்

சிங்க ராஜா
சிங்க ராஜா
எங்கே போறிங்க

சர்க்கசுக்கு
என்னையும் தான்
கூட்டி போங்களேன் 



வினாவிடைப் பாடல்
பாடல் - 1. 
என்ன அன்னம் - சோத்தன்னம்
என்ன சோறு - பழஞ்சோறு
என்ன பழம் - வாழைப்பழம்
என்ன வாழை - திரி வாழை
என்ன திரி - விளக்குத்திரி
என்ன விளக்கு - குத்துவிளக்கு
என்ன குத்து - கும்மாம்குத்து

பாடல் - 2 
தண்ணி தண்ணி

என்னா தண்ணி
பச்சத் தண்ணி

என்னா பச்ச
அம்மாம் பச்ச

என்னா அம்மா
டீச்சர் அம்மா

என்னா டீச்சர்
கணக்கு டீச்சர்

என்னா கணக்கு
வீட்டுக் கணக்கு

என்னா வீடு
மொட்ட வீடு

என்னா மொட்ட
திரிப்பதி மொட்ட

என்னா திரி
வெளக்குத் திரி

என்னா வெளக்கு
குத்து வெளக்கு

என்னா குத்து
கும்மாங் குத்து...


தவளையார்


கொட்டும் மழையின் சத்தம் கேட்டுக் 

கொர் கொர் என்று தவளையார் 

எட்டிப் பார்த்து நாக்கை நீட்டி                 

இன்பம் கொண்டு பாடினார்.                          











                                                                            
 சொட்டும் மழையின் சத்தம்  கேட்டுச்

  சொகுசுக் காரத் தவளையார்

  மட்டில்லாத மகிழ்ச்சி கொண்டே

  மாறி மாறிப் பாடினார்.


                                     
                                         பொட்டுப் பொட்டாய் மழையும் பெய்யப் 

                                         பூரிப் பெய்தித் தவளையார் 
                                                                              
                                         முட்டி மோதி நீரைத் தள்ளி 

                                         முகத்தைக் காட்டி ஓடினார்.




       அச்சும் தாத்தா



                                                            காட்டுப் பக்கம் தாத்தாவுக்கு
                                                            காடு போலத்  தாடியாம்
                                                            மாடி மேலே நிற்கும் போது
                                                             தாடி மண்ணில் புரளுமாம்.

ஆந்தை ரெண்டு கோழி மைனா                    உச்சி மேலே நின்ற தாத்தா
அண்டங்காக்கா குருவிகள்                             உடல் குலுங்கத் தும்மினார்
பாந்தமாகத் தாடிக்குள்ளே                               அச்சும் அச்சும் என்றபோது
பதுங்கிக் கொண்டு நின்றன.                           அவை அனைத்தும் பறந்தன.





ஒத்த ஓசைப் பாடல்கள் 


1. வெங்கு, வெங்கு, வெங்கு                                    2. முறுக்கு முறுக்கு முறுக்கு
    

    வெங்கு ஊதினான் சங்கு                                      வாயிலே போட்டு நொறுக்கு
   

     நுங்கு நுங்கு நுங்கு                                                    அரக்கு அரக்கு அரக்கு

     நுங்கில் எனக்குப் பங்கு.                                        
தீயிலே காட்டி உருக்கு.


3.         "ப" வரிசைப் பாடல்

பந்து பந்து பந்து
பாலர் ஆடும் பந்து
பிட்டு பிட்டு பிட்டு 
பீங்கான் கோப்பையில் பிட்டு

 புதுமை புதுமை புதுமை
பூக்கள் எல்லாம் புதுமை
பெட்டி பெட்டி பெட்டி
பேரிச்சம்பழப் பெட்டி

பையன்பையன் பையன்
பொம்மை போன்ற பையன்
போட்டி போட்டி போட்டி
பௌர்ணமி தினத்தில் போட்டி!


மண்புழுவே!                                                                                 எண் பாடல்     

                                                       

மண்ணுக்குள்ளே மண்புழுவே                                 ஒன்று இரண்டு மூன்று               

என்ன செய்கிறாய்? நான்                                            
ஒரு­கையை ஊன்று

மண்ணைக் கிளறி மரம் வளர                                   
நான்கு ஐந்து ஆறு

உதவி செய்கிறேன்.                                                         
நல்ல படம் கீறு.
                                                         
                                                                          
                                                                                    ஏழு எட்டு ஒன்­பது

                                                                                   எந்த பழம் நல்­லது?

                                                                                   பத்து பத்து பத்து
                                                                              
                                                                                   மல்­லிகைப் பூக்­கொத்து..

ஒத்த ஓசைப் பாடல்கள்

1.      ”நீயும் நானும் கூட்டு
   பாடு ஒரு பாட்டு
      சில்லரையை நீட்டு
      சிவகாசி வேட்டு 
          திண்டுக்கல்லுப் பூட்டு
                   திருப்பித்தலையை ஆட்டு”


2.    கந்தையாவின் தந்தையார் 
சந்தை சென்று வந்தனர்
          விந்தையான கனியொன்றை 
      விரும்பி வாங்கி வந்தனர்.


பிராணிகளின் நற்பண்புகள்
வரிசையில் செல்லும் பழக்கத்தை
எறும்பைப் பார்த்துக் கற்றுக்கொள்!
கூடி உண்ணும் பண்பதனைக்
காக்கையைப் பார்த்துக் கற்றுக் கொள்!

நன்றி எனும் நற்பண்பை
நாயைப் பார்த்துக் கற்றுக்கொள்!
சேரத்து வைக்கும் பழக்கத்தைத்
தேனீயைப் பார்த்துக் கற்றுக்கொள்!

வீரம் வாழ்வில் வேண்டுமென்று
சிங்கத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்!
சீக்கிரம் எழுகின்ற பழக்கத்தைச்
சேவலைப் பார்த்துக் கற்றுக்கொள்!

பொறுமை என்னும் பொற்பண்பை
எருமையைப் பார்த்துக் கற்றுக்கொள்!
விடாமுயற்சி என்னும் நற்பண்பைச்

சிலந்தியைப் பார்த்துக் கற்றுக் கொள்!

தலைவனைப் பின்பற்றும் பண்பை

மாட்டைப் பார்த்துக் கற்றுக் கொள்.
இப்படி நல்லதைக் கற்றுக் கொள்!
உலகில் நிறையத் தெரிந்து கொள்!


No comments:

Post a Comment